×

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு ம.நீ.ம. தலைவர் கமல் பாராட்டு..!!

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் வைப்பு நிதி வைக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளை காக்க முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்திருந்தேன். தற்போது  குழந்தைகளின் படிப்பு செலவுகளை அரசே ஏற்பதாக முதலமைச்சர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிர்க்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பு ஈடு செய்யவும் அந்த குழந்தை 18 வயது நிறைவடையும் போது அந்த தொகை குழந்தைக்கு வட்டியோடு வழங்கிடவும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 


பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும் என்றும் பட்டப்படிப்பு வரை கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்று இடம் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணமாக ரூபாய் 3 லட்சம் வழங்கப்படும் என்றும் அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் அல்லது உறவினரின் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 3000 உதவி தொகை அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் வைப்பு நிதி வைக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Tags : Corona ,Chief Minister BC ,Ea ,Stalin ,Kamal , Coronova, child, Rs 5 lakh, Chief Minister MK Stalin, Kamal
× RELATED வேறு பள்ளியில் சேரும் மாணவர்களிடம்...