×

ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்: பிசிசிஐ துணைத் தலைவர் அறிவிப்பு

மும்பை: ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் ஷூக்லா தெரிவித்துள்ளார். இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்து 14 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் 4 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 29 போட்டிகள் முடிந்த நிலையில், எஞ்சியப் போட்டிகள் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது. இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்து 14 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் 4 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 


இதுவரை மொத்தம் 29 போட்டிகள் முடிந்த நிலையில், எஞ்சியப் போட்டிகள் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது. ஐ.பி.எல். மீண்டும் தொடங்கும் போது அதில் இங்கிலாந்து வீரர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருக்கும் நிலையில் இங்கிலாந்து உள்பட வெளிநாட்டு வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கும் விஷயத்தில் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும், கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.



Tags : IPL ,United Arab Emirates ,PCI , IPL, 31 matches, United Arab Emirates, BCCI
× RELATED கனமழை காரணமாக துபாய், ஷார்ஜா சாலைகளில் வெள்ளப்பெருக்கு!