×

கொரோனாவால் உயிரிழந்த தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி வனிதா குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கொரோனாவால் உயிரிழந்த தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி வனிதா குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூா் நீதிபதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா் நீதிபதி வனிதா (55) திருச்சியிலுள்ள மகளிா் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணிபுரிந்து வந்தாா். 


இவா் அண்மையில் மாற்றலாகி தஞ்சாவூரில் மாவட்ட நீதிபதி நிலையிலுள்ள மக்கள் நீதிமன்ற நிரந்தரத் தலைவராக மே 5 ஆம் தேதி பொறுப்பேற்றாா். அன்றைய நாளிலேயே தனது மகள் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி விடுப்பில் தூத்துக்குடிக்குச் சென்றாா்.அங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவா் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு நீதிபதி வனிதா ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.



Tags : Thanjavur ,Corona ,Vanita , Corona, Vanitha family, Rs 25 lakh, financial assistance
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் சுற்றிதிரிந்த சிறுவன் மீட்பு