×

உ.பி.யில் மசூதி இடிப்பு: நீதி விசாரணைக்கு வக்பு வாரியம் கோரிக்கை

லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் பாரபங்கியில் பழமைவாய்ந்த  காரீப் நவாஸ் மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி தொடர்பாக  கடந்த மார்ச் 15ம் தேதி உள்ளூர் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கட்டிடம் அமைந்துள்ள இடம் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்தும், இடம், கட்டிடம் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளதாகவும் மேற்கோள் காட்டப்பட்டு இருந்தது. 18ம் தேதி இந்த மசூதி இடத்தை உள்ளூர் நிர்வாகம் கையகப்படுத்தியது. ஏப்ரல் 2ம் தேதி இது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து கடந்த திங்களன்று இரவு போலீசாரின் உதவியுடன்  உள்ளூர் நிர்வாகம் இந்த மசூதியை  இடித்து தரைமட்டமாக்கி உள்ளது. இதற்கு சன்னி வக்பு வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாரபங்கி  நிர்வாகம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மசூதியை இடித்துள்ளதாகவும், இது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். அதேநேரத்தில் அதிகாரிகள் சட்டவிரோத கட்டிடம் என்பதாலும்  நீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலும்  மசூதி அமைந்திருந்த கட்டிடம் இடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்….

The post உ.பி.யில் மசூதி இடிப்பு: நீதி விசாரணைக்கு வக்பு வாரியம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : UP ,Waqf board ,Lucknow ,Gharib Nawaz Mosque ,Barabangi, Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED போட்டி தேர்வுகளில் முறைகேடு: ஆயுள்...