×

14-வ-வது ஐபிஎல் போட்டி: எஞ்சிய போட்டிகளை எப்போது நடத்துவது? பிசிசிஐ அதிகாரிகள் இன்று ஆலோசனை

டெல்லி: கொரோனாவால் நிறுத்தப்பட்ட எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை எப்போது நடத்துவது என பிசிசிஐ இன்று ஆலோசனை நடத்தகிறது. பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி மூலம் நடைபெற உள்ளது. 4 அணி வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால் 14-வ-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் மே மாதம் 4 முதல் நிறுத்தப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன. ஐ.பி.எல். மீண்டும் தொடங்கும் போது அதில் இங்கிலாந்து வீரர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருக்கும் நிலையில் இங்கிலாந்து உள்பட வெளிநாட்டு வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கும் விஷயத்தில் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும், கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையம் பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளது. 


கொரோனா பயத்தால் கடந்த சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டதால் வீரர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்தபடி இன்னும் வழங்கப்படவில்லை. அந்த தொகையை வழங்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.



Tags : IPL ,PCI , 14th, IPL, Match, BCCI, officials, consultation
× RELATED கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் திருவிழா