×

முதல்வர் நாளை கோவை பயணம்

சென்னை: தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகள் மூலம் சென்னையில் கடந்த 12ம் தேதிக்கு பிறகு கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வந்தது. இந்தநிலையில், சென்னையை பின்னுக்கு தள்ளி கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்திற்கு சென்றுள்ளது. நாள் தோறும் புதிய பாதிப்பு அங்கு 5 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கோவைக்கு அடுத்தபடியாக மதுரை, திருப்பூர், ஈரோடு, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.  

பாதிப்பு அதிகரித்து வரும் 6 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். பின்னர், 6 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார். இதேபோல், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கொரோனாவை கட்டுப்படுத்த 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.  
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை  மாவட்டம் செல்கிறார். அங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.


Tags : Coi , The Chief Minister will travel to Coimbatore tomorrow
× RELATED சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்...