×

டொமினிகா நீதிமன்றம் திடீர் தடை சோக்சியை நாடு கடத்த முடியாது: இந்தியா கொண்டு வருவதில் சிக்கல்

மும்பை:  பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தலைமறைவான மெகுல் சோக்சியை டொமினிகாவில் இருந்து  இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணங்களை பயன்படுத்தி வைர வியாபாரி நீரவ் மோடி , அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர்  ரூ.13,500 கோடி கடன்பெற்று திருப்பி செலுத்தாமல்  மோசடி செய்தனர். மெகுல் சோக்சி இந்தியா மற்றும் ஆன்டிகுவா என இரட்டை குடியுரிமை பெற்றிருப்பதால், கடந்த 2018ம் ஆண்டு கரிபீயன் நாடான ஆன்டிகுவாவில் தஞ்சமடைந்தார். அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிந்து தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளன.

இதற்கிடையே, மெகுல் சோக்சி கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆன்டிகுவாவில் இருந்து சட்டவிரோதமாக டொமினிகாவுக்கு படகில் தப்பிச் சென்றார். அவரை டொமினிகா போலீசார் கைது செய்தனர். மெகுல் சோக்சி மன்னிக்க முடியாத தவறு செய்ததால் அவரை டொமினிகாவில் இருந்து நேரடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என ஆன்டிகுவா பிரதமர் கஸ்டவுன் பிரவுன் வலியுறுத்தி இருந்தார். இதனால் சோக்சியை இந்தியா கொண்டு வர மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே, ஆன்டிகுவா குடியுரிமை பெற்று இருப்பதால் சோக்சியை இந்தியாவிடம் ஒப்படைக்கமுடியாது டொமினிகா அரசு தெரிவித்துள்ளது.

 அதோடு, சோக்சியின் வழக்கறிஞர்கள் கரிபீயன் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் சோக்சியை நாடு கடத்துவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அவரை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  

அடித்து சித்ரவதை
டொமினிகோவில் உள்ள மெகுல் சோக்சியின் வழக்கறிஞர் வாய்னே மார்ஷ் கூறுகையில், “போலீஸ் காவலில் சோக்சி கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவரது கண்கள் வீக்கமடைந்து இருந்தது. அவரது உடலில் பல்வேறு இடங்களில் தீக்காயங்கள் இருந்தன. ஆன்டிகுவாவின் ஜாலி துறைமுகத்தில் இருந்து அவர் இந்தியா மற்றும் ஆன்டிகுவா போலீசார் என நம்பப்பட்ட நபர்கள் மூலமாக கடத்தப்பட்டு கப்பலில் டொமினிகா கொண்டு செல்லப்பட்டுள்ளார்” என்றார்.

Tags : Dominica court ,Choksi ,India , Dominica court cannot deport abrupt ban: problem in bringing it to India
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!