பள்ளிக் கல்வி இயக்குநருக்கு மீண்டும் பதவி

சென்னை: பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தை  ரத்து செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டார்.  அதற்கு பதிலாக பள்ளிகல்வித்துறைக்கு ஆணையர் பணியிடம் ஏற்படுத்தப்பட்டு, புதிய  ஆணையராக நந்தகுமார் கடந்த 17ம் தேதி  பொறுப்பேற்றார். முன்னதாக பள்ளிக் கல்வி இயக்குநர் பணியில் இருந்து வந்த கண்ணப்பன், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.  சுமார் 12 நாட்களுக்கு பிறகு, பள்ளிக் கல்வித்துறையில் உள்ள சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் மாநில கூடுதல் திட்ட  இயக்குநராக கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பணியில்  இருந்த ஐஏஎஸ் அதிகாரி அமிர்தஜோதி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு  வெளியிட்டார்.

Related Stories:

>