×

டிரம்ப் பயன்படுத்திய ‘காக்டெய்ல்’ மருந்துக்கு மத்திய அரசு அனுமதி: ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் ‘குளோஸ்’..! ஐதராபாத் ஏஐஜி மருத்துவமனையின் தலைவர் தகவல்

ஐதராபாத்: அமெரிக்க முன்னாள் அதிபர் பயன்படுத்திய ‘காக்டெய்ல்’ மருந்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளால், ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் அழிக்கப்படும் என்று ஐதராபாத் ஏஐஜி மருத்துவமனையின் தலைவர் தெரிவித்தார்.
கொரோனா தடுப்புக்கு அலோபதி, சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி என்று பல்வேறு மருத்துவ முறைகளும் கடைபிடிக்கப்பட்டாலும், சர்வதேச நாடுகளும் அலோபதி முறையிலான தடுப்பூசிக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளன. கடந்தாண்டு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு, கொரோனா தடுப்பு மருந்தாக ஆன்டிபாடி ‘காக்டெய்ல்’ கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா அறிகுறிகள் லேசானது முதல் மிதமானது வரை  உள்ள நோயாளிகளுக்கு இம்மருந்தை கொடுக்கலாம். இந்த மருந்து, நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பை 70  சதவீதம் குறைக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து, தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஏஐஜி மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் டி.நாகேஷ்வர் ரெட்டி கூறுகையில், ‘மோனோக்ளோனல் முறையில் ஆன்டிபாடி காக்டெய்ல் பயன்படுத்துவதால், கொேரானா நோயாளிகள் கோவிட் தொடர்பான சிக்கல்களில் இருந்து தப்ப முடியும். இந்தியாவில் அதன் பயன்பாட்டிற்கு மத்திய அரசு  ஒப்புதல் அளித்துள்ளது. இம்மருந்தை பயன்படுத்துவதால், ஒரு வாரத்திற்குள் கொரோனா நோயாளிகள் தொற்றில் இருந்து மீள்வார்கள். மேலும், ஆர்டி-பிசிஆர் டெஸ்டில் நெகடிவ் ரிசல்ட் வரும். மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளின் உண்மையான ஆதாரங்கள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் உட்பட மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட மருத்துவ ஆய்வுகள், ‘காக்டெய்ல்’ மருந்தை பயன்படுத்த அனுமதித்து ஊக்கமளிக்கின்றன. இம்மருந்தை மருத்துவமனையில் அனுமதிப்பதால், நோயாளியின் மரணத்தை 70 சதவீதத்திற்கும் மேலாக குறைக்க முடியும். இரண்டு மோனோகுளோனல் ஆன்டிபாடிகள், ஒரு காக்டெய்ல் மருந்தில் உள்ளது.

இந்த மோனோகுளோனல் ஆன்டிபாடிகள் செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு, குறிப்பிட்ட நோயை எதிர்த்துப் போராடுவதற்காக வடிவமைக்கப்பட்டவை. இரண்டு ஆன்டிபாடிகளை வயதானவர்கள், நீரிழிவு நோயாளிகள், உடல் பருமன், இருதய பிரச்னைகள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை உட்கொள்வோர் பயன்படுத்தலாம். இதயம் தொடர்பான பிரச்னைகள் இருந்தால் 55 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் வழங்கலாம். இருப்பினும், கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த சிகிச்சை முறை அனுமதிக்க கூடாது. இந்த சிகிச்சைக்குப் பிறகு, தொற்றில் இருந்து குணமடையும் நோயாளிகள், அவர்கள் தடுப்பூசி போடுவதற்கு குறைந்தது மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆன்டிபாடி காக்டெய்லை குறிப்பிட்ட மருத்துவமனையில் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.

Tags : Trump ,Hyderabad ,AIG Hospital , Federal approval for Trump-used 'cocktail' drug: Corona virus 'closes' in a week ..! Hyderabad AIG Hospital President Information
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்