×

கொரோனா பெருந்தொற்று காலத்தில் செல்வந்தர்களின் பாதுகாப்பான புகலிடமாக மாறிய சிங்கப்பூர்!: வெள்ளமாக பாயும் பணம்..!!

சிங்கப்பூர்: கொரோனா பெருந்தொற்று காலத்தில் செல்வந்தர்களின் பாதுகாப்பான புகலிடமாக சிங்கப்பூர்  உருவெடுத்துள்ளது. இதனால் எப்போதும் இல்லாத வகையில் சிங்கப்பூரில் பணம் பாய்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூரில் மட்டும் பணம் வெள்ளமாக பாய்வது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மிகவும் வசதி படைத்தவர்களுக்கு  பாதுகாப்பான புகலிடமாக சிங்கப்பூர் மாறியதே காரணமாகும். குறிப்பாக ஹாங்காங்கில் தொடரும் பிரச்சனைகள் காரணமாக அங்கிருந்து புதிய பகுதியில் குடியேற விரும்புவோருக்கான புகலிடமாக சிங்கப்பூர் மாறியுள்ளது. 


சிங்கப்பூரின் கடுமையான சட்டங்கள், அமைதியான சூழல் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. குறிப்பாக கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தி உள்ளதும் புகலிடம் தேடுவோருக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. இதுவரை மொத்தமே 40 பேர் தான் சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தோனேசிய சீனர்கள், இந்தோனேசியவர்கள் மற்றும் மலேசியாவை சேர்ந்தவர்கள் அதிகமாக சிங்கப்பூரை தேடி செல்கின்றனர். 5 ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 75 விழுக்காடாகவும், சிங்கப்பூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 25 விழுக்காடாகவும் இருந்த நிலையில், தற்போது சிங்கப்பூர் செல்வோர் எண்ணிக்கை 50 விழுக்காடாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 



Tags : Singapore , Corona, Wealthy, Asylum, Singapore
× RELATED சிங்கப்பூரில் இருந்து...