×

ஏரல் அருகே சூறைக்காற்றில் வாழைகள் சேதம்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு

ஏரல் :  ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் பகுதியில் சூறைகாற்றினால் சேதமடைந்த வாழைகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஏரல் அருகே ஆறுமுகமங்கலம், இருவப்பபுரம், சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல லட்சம் வாழைகள் பயிரிட்டுள்ளனர். இந்த வாழைகள் பெரும்பாலும் குலை தள்ளிய நிலையில் உள்ளன.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் திடீரென அடித்த சூறைக்காற்றில் ஆறுமுகமங்கலம், கரையடியூர், இருவப்பபுரம், சாலை, பேய்குளம், உமரிக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாழைகளுக்கு மேல் ஒடிந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்த தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுமுகமங்கலம், கரையடியூர் பகுதிக்கு சென்று சேதமடைந்த வாழைகளை பார்வையிட்டார். அப்பொழுது விவசாயிகள், வாழைகள் ஒடிந்து சேதடைந்துள்ளதால் நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். இதில் இருந்து மீண்டு வர அரசு எங்களுக்கு உதவிட வேண்டும் என அமைச்சரிடம் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அமைச்சர், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அமைச்சருடன் கலெக்டர் செந்தில்ராஜ், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ தனப்பிரியா, ஏரல் தாசில்தார் இசக்கிராஜ், மண்டல துணை தாசில்தார் சேகர், மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தரராஜன், வைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிஜி ரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜெ.ஜெகன், மாவட்ட பொறியாளரணி அமைப்பாளர் ஆனந்த், விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் பாலமுருகன், சாயர்புரம் இளைஞரணி கண்ணன், ஓய்வுபெற்ற எஸ்ஐயும், விவசாயிமான நாராயணன், தோட்ட கலைத்துறை அதிகாரிகள், விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags : Minister ,Anita Radakrishnan , Earl: Minister Anita Radhakrishnan visits bananas damaged by cyclone in Arumugamangalam area near Earl
× RELATED மீனவர் பிரச்னை குறித்து முக்கிய...