×

சான்ட்னரும்... சாப்பாடும்....

தனது உணவு விருப்பங்கள் குறித்து நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர்  மிட்செல் சான்ட்னர்...
* காலை பயிற்சிக்குமுன்பு பெர்ரி யோகர்ட், கொஞ்சுண்டு புரோட்டின் பார், பயிற்சிக்கு பிறகு எக்  பெனடிக்ட், புரோட்டின்  ஷேக்
*  பிடித்த ஆனால் தவிர்க்கும் உணவுகள் சாக்லெட்,  பிஸ்கெட் என இனிப்பு வகைகள்தான். உடல் தகுதிக்காக தவிர்க்கிறேன்.  களத்தில் சாதித்தால் ஐஸ்கிரீம் கிடைக்கும்.
* எப்போதும் உங்கள் பையில்...அது எந்த ஊருக்கு போகிறேன் என்பதை பொறுத்து. பெரும்பாலும் நியூசிலாந்து பிஸ்கெட்கள்,  காப்பி பொடி
* கிரிக்கெட் வீரர் தவிர்க்க வேண்டிய துரித உணவுகள்அது ..... (பதில் சொல்லாமல் சிரிக்கிறார்). வெற்றி பெற்றால்  மெக்டொனல்டு உணவுகள் கிடைக்கும்.
* நன்றாக சமைக்கும் கிரிக்கெட் வீரர்நீல் வாக்னர்(நியூசி). தென் ஆப்ரிக்கரான அவர்   பார்பிக்யூ நன்றாக சமைப்பார்.
* சிறந்த உணவு கிடைக்கும் கிரிக்கெட் அரங்கம் வெளிநாடுகளில் என்றால் இங்கிலாந்தின் லார்ட்ஸ் அரங்கம்.  அங்கு வகை, வகையான உணவுகள் கிடைக்கும். நியூசிலாந்து என்றால் ஹாமில்டனில் உள்ள செடோன் அரங்கம். அது எனது ஊர்.
* இனி ஏதாவது ஒரு உணவை மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்றால்...
அது  பீப் பர்கர் தான். அது என்னுடைய விருப்ப உணவு. தினமும் சாப்பிடச் சொன்னாலும் சாப்பிடுவேன். இந்த ஊரடங்கால்  பீப் பர்கர் கிடைப்பது சிரமமாக உள்ளது. ஆனாலும் வாரத்திற்கு 3நாட்களாவது சாப்பிட்டு விடுகிறேன்.
* சாதித்த பிறகு...போட்டியில் வென்றால்  மெக்டொன்ல்டு உணவுகள்... அப்புறம் 2 பீர்.  எங்கள் அணியில் உள்ளவர்கள் இதைதான் செய்வார்கள்.

Tags : Santner , New Zealand spinner Mitchell Santner on food options
× RELATED சில்லி பாயிண்ட்