ஆசிரமத்தில் பெண்களை தங்கவைத்து அட்டூழியம் பிரசாதத்தில் ‘கஞ்சா’ கலந்து பலாத்காரம்: ராஜஸ்தான் ‘பாபா’ அதிரடி கைது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பெண் பக்தர்களை ஆசிரமத்தில் தங்கவைத்து கடவுளின் பிரசாதம் எனக் கூறி கஞ்சா கலந்த இனிப்பை கொடுத்து பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த பாபாவை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த பங்கரோட்டா பகுதியில் முகுந்த்புரா என்ற ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வர். பாபா சந்நியாசி என்பவரால் தொடங்கப்பட்ட இந்த ஆசிரமம், தற்போது அவரது மகன் யோகேந்திர மேத்தாவால் (56) நடத்தப்பட்டு வருகிறது. முகுந்த்புராவைத் தவிர, யோகேந்திர மேத்தாவின் ஆசிரமம் ஒன்று ரத்தல்யா சிகார் - டெல்லி சாலையிலும் உள்ளது. யோகேந்திர மேத்தா தன்னை பாபா சந்நியாசி என்று அழைத்துக் கொண்டு பிரபலமானார். இந்நிலையில், பாபா சந்நியாசி யோகேந்திர மேத்தாவால் மீது போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து ஜெய்ப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ் சவுத்ரி கூறுகையில், ‘கடந்த 25 ஆண்டுகளாக பெண் ஒருவர் தன் குடும்பத்துடன் முகுந்த்புரா ஆசிரமத்திற்கு வந்து செல்வார். அந்த பெண்ணுக்கு கடவுளின் பிரசாதம் எனக்கூறி கஞ்சா கலந்த இனிப்புகளை யோகேந்திர மேத்தாவால் கொடுக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் போலீசில் அளித்த புகாரில், ‘என் கணவர் மற்றும் குடும்பத்தினர் அடிக்கடி பாபா கோயிலுக்கு சென்று வருவோம். பாபா அவ்வப்ேபாது ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுவார். 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரமத்திற்கு சென்று வருவோம். அப்போது, 4 நாட்கள் வரை ஆசிரமத்திலேயே தங்கி பக்தர்களுக்கு சேவை செய்வோம். ஆரம்பத்தில் ஆசிரமத்தில் எல்லாம் சரியாகதான் சென்றது. கொஞ்ச நாட்களுக்கு பின் பாபா மூலமாக எனக்கு பாலியல் தொந்தரவுகள் தொடங்கின. தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரை பாபாவின் ஆசிரமத்தில் பெண்கள் தங்கியிருக்க அனுமதி அளித்தார்.

நானும் என்னுடன் சேர்ந்த சில பெண்களும் தங்கினோம். ஒரு நாள் இரவு, என்னிடம் பேசிய பாபா அவர் தங்கியிருக்கும் மேல் மாடிக்கு வரச் சொன்னார். கடவுளுக்கு படைக்கப்படும் பிரசாதம் வழங்குவதாக தெரிவித்தார். அந்த பிரசாதத்தை சாப்பிட்டு கடவுளை தியானித்தால், நல்ல பலன்கள் கிடைக்கும் என்றார். நானே கடவுள் என்றும் பாபா கூறினார்.  அங்கு அவர் வைத்திருந்த இனிப்பு பிரசாதத்தை கொடுத்தார். அதனை சாப்பிட்டவுடன் எனக்கு கொஞ்சம் போதை ஏற ஆரம்பித்தது. பின்னர் அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். போதை மயக்கம் தெளிந்த பின்னர், என்னை அங்கிருந்து விடுவித்தார். அன்றிலிருந்து நான் ஆசிரமத்திற்கு செல்லவில்லை. என் கணவரின் விருப்பத்தின் பேரில் 6 மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் ஆசிரமத்திற்கு குடும்பத்துடன் சென்றேன்.

அப்போது என்னை அழைத்த பாபா, மீண்டும் எனக்கு பிரசாதம் தருவதாக கூறினார். அதற்கு நான் மறுத்தவுடன், ஆட்களை ஏவி கொலை செய்வதாக அச்சுறுத்தினார்.

நடந்த சம்பவத்தை எனது கணவர் மற்றும் எனது 20 வயதுள்ள மகளிடம் ெதரிவித்தேன். இந்த விஷயம் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் தெரியவந்தது. அதனால், எனது கணவரின் சகோதரர் மற்றும் எனது கணவர் ஆகிய இருவரும், பாபாவை சந்தித்து நியாயம் கேட்க சென்றனர். அங்கு அவர், இருவரையும் அழித்துவிடுவதாக மிரட்டல் விடுத்தார். மேலும், இவ்விஷயத்தை வெளியே சொன்னால் குடும்பத்துடன் காலி செய்துவிடுவதாக பாபாவின் ஆட்கள் மிரட்டினர். என்னை போல், மேலும் 4 பெண்கள் பாபாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக, தன்னை கடவுள் எனக்கூறிக் கொண்டு பல பெண்களை பிரசாதத்தில் கஞ்சா கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த யோகேந்திர மேத்தாவால் மீது மே 5ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், தலைமறைவாக இருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட ேயாகேந்திர மேத்தா மீது மற்றொரு பெண் பக்தரும் அவரால் பாலியல் பலாத்காரம் ஆளானதாக புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார். பிரசாதத்தில் கஞ்சா கலந்து கொடுத்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>