×

மீண்டும் மீண்டும் தவறான தகவல்களை பகிர்ந்தால் நடவடிக்கை: பேஸ்புக் எச்சரிக்கை

புதுடெல்லி: தவறான தகவல்களை மீண்டும் மீண்டும் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தவறான தகவல்களை பதிவிடுவோருக்கு, அதை பதிவிட்டமைக்காக எச்சரிக்கை செய்தி அனுப்பும் வழக்கம் பேஸ்புக்கில் இருக்கிறது. தற்போது இந்த எச்சரிக்கைக்கு அடுத்தபடியாக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பேஸ்புக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பேஸ்புக் நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ‘கொரோனா தடுப்பூசி, பாதிப்பு, பருவநிலை மாற்றங்கள், தேர்தல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை தவறாக பகிரும் நபர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பிட்ட அந்த பயனாளரின் பதிவுகள், மக்களை அடையாதபடி நாங்கள் பார்த்துக்கொள்வோம். அதே சமயம், சம்மந்தப்பட்ட நபர் மீண்டும் மீண்டும் தவறான தகவல்களை பகிர்ந்தபடி இருந்தால், அவரின் எந்த பதிவுகளும் வராமல் இனி தடுக்கப்படும்.
ஒவ்வொரு பேஸ்புக் பக்கத்திற்கும் அதன் தவறான தகவல்களின் எண்ணிக்கை அல்லது விவரங்கள் பயனாளிகளுக்கு காண்பிக்கப்படும். அதன் மூலம் அப்பக்கததை பற்றிய தெளிவான பார்வை கிடைக்கும்’ என கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு அமல்படுத்திய புதிய விதிமுறையை ஏற்பதாக பேஸ்புக் கூறியிருக்கும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Facebook , Action if you repeatedly share false information: Facebook alert
× RELATED பெண்ணை கர்ப்பமாக்கிய எஸ்ஐ அதிரடி சஸ்பெண்ட்