இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகள்: அசன் மவுலானா அறிவிப்பு

சென்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் அசன் மவுலானா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலுடன், தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், மாநில பொது செயலாளராக டாக்டர் பாலகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில செயலாளர்களாக விக்னேஷ்வரன், மரகதம் தங்கவேலு, சையத் முகமது சல்மான், டாக்டர் செந்தில் குமார், பாஸ்கரன், அப்ரோஸ் அகமது, ராஜா கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று தலைமை நிலைய செயலாளராக ரஹ்மான் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

More