×

லட்சத்தீவு மக்களின் அடிப்படை உரிமைகளில் கைவைப்பதா? மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை: லட்சத்தீவு மக்களின் அடிப்படை உரிமைகளில் கை வைப்பதா என்று மத்திய அரசுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வௌியிட்டுள்ள அறிக்கை:நீண்ட நெடுங்காலமாக, லட்சத்தீவு மக்கள் தங்களது வணிகம் நடவடிக்கைகளை கேரள மாநிலம் பேப்பூர் துறைமுகம் வழியாகவே செய்து வருகின்றனர், இனி, கர்நாடகத்தின் மங்களூரு துறைமுகம் வழியேதான் நடக்க வேண்டும் என்ற உத்தரவையும் போட்டுள்ளார். லட்சத்தீவு வணிகம் அனைத்தையும், கேரளாவில் இருந்து அப்படியே பாஜ ஆளும் கர்நாடகாவுக்கு கொண்டு சென்று விட வேண்டும். லட்சத்தீவு மக்களின் கேரள உறவையும் தொடர்புகளையும் துண்டித்து விட வேண்டும் என்பதுதான் நோக்கம்.

லட்சத்தீவு மக்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கும் பிரபுல் பட்டேல் நடவடிக்கைகளை கடுமையாகக் கண்டித்து,  கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எளமரம் கரீம், ஆரிப் ஆகியோர், குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளனர். பிரபுல் கோடா பட்டேலை திரும்ப அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். லட்சத் தீவில், பாஜ நரேந்திர மோடி அரசு மேற்கொண்டு வருகிற அடக்குமுறையை,  மதிமுக வன்மையாக கண்டிக்கிறது; பிரபுல் கோடா பட்டேலை உடனே திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Lakshan ,Vigo , Handing over the basic rights of the people of Lakshadweep? Waiko condemns the federal government
× RELATED மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பு: வைகோ கண்டனம்