×

5 மாத குழந்தை மர்மமாக இறந்ததால் ‘சூனியக்காரி’ எனக்கூறி 2 சகோதரிகள் மீது தாக்குதல்: மந்திரவாதி உள்ளிட்ட கிராமத்தினர் மீது வழக்கு

ஜமுய்: பீகாரில் 5 மாத குழந்தை மர்மமாக இறந்ததால், ‘சூனியக்காரி’ எனக்கூறி 2 சகோதரிகள் பிடித்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் மந்திரவாதி உள்ளிட்ட கிராமத்தினர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். பீகார் மாநிலம் சிமுல்தாலா அடுத்த காசிதாரி கிராமத்தை சேர்ந்த ராகேஷ் ஷாவின் 5 மாத ஆண் குழந்தை, கடந்த 22ம் தேதி திடீரென இறந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், அப்பகுதியில் உள்ள மந்திரவாதியிடம் அணுகி, தங்களது குழந்தையின் மரணத்திற்கு காரணம் என்ன? என்று ேகட்டனர். அதற்கு அந்த மந்திரவாதி, உங்களது குழந்தைக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், ‘குழந்ைத புதைக்கப்பட்ட இடத்தை இரவில் கண்காணிக்க வேண்டும்.

அப்போது சூனியக்காரி வருவாள்’ என்று அந்த மந்திரவாதி கூறியுள்ளார். அதையடுத்து, மத்திரவாதி கூறியபடி சூனியக்காரியை பார்ப்பதற்காக, ராகேஷ் ஷா மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலர் திட்டமிட்டனர். இந்நிலையில், குழந்தை புதைக்கப்பட்ட சுடுகாட்டின் அருகே, நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியை சேர்ந்த இரண்டு சகோதரிகள், இயற்கை உபாதை கழிப்பதற்காக ஆற்றின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, சூனியக்காரியை எதிர்பார்த்து காத்திருந்த ராகேஷ் மற்றும் கிராமத்தினர், மேற்கண்ட இரு சிறுமிகளும் நடந்து செல்வதை பார்த்து பீதியடைந்தனர். பின்னர், அந்த இரண்டு சகோதரிகளையும் பின்தொடர்ந்து சென்றனர்.

பின்னர், அவர்கள் இருவரையும் ‘சூனியக்காரிகள்’ எனக்கூறி அவர்களது கிராமத்திற்கு அழைத்து வந்து துன்புறுத்தத் தொடங்கினர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, குறிப்பிட்ட ​​கிராமத்தினர் போலீசாரை கண்டதும் ஓடினர். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமிகள் போலீஸ் உயரதிகாரிகள் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இதுகுறித்து,  ஜமுய் போலீஸ் எஸ்.பி. பிரமோத் குமார் மண்டல் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட சிறுமிகள், இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றனர். அவர்களை  சூனியக்காரிகள் எனக்கூறி, வலுக்கட்டாயமாக பிடித்து வைத்து அவர்களின் தலைமுடியை  வெட்டியுள்ளனர்.

மேலும் அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். காயமடைந்த இரு சிறுமிகளும்  கிராமவாசிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். மூடநம்பிக்கையின் அடிப்படையில் இந்த குற்றத்தை செய்த மந்திரவாதி உட்பட சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளோம். அவர்களை கைது செய்ததற்காக தனிப்படை அமைத்து தேடி வருகிறோம்’ என்றார்.


Tags : Attack on 2 sisters for calling a 5-month-old baby a 'witch' for mysterious death: Villagers, including a witch
× RELATED ரூ.11 கோடி வரி நிலுவையில் உள்ளதாக இந்திய...