நாய்கள் மூலம் கொரோனா வைரஸ்?.. மலேசிய தொற்றுநோயியல் நிபுணர் தகவல்

கோலாலம்பூர்: மலேசியாவில் நாய்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளதால், நாய்கள் மூலம் மனிதர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளதாக தொற்றுநோயியல் நிபுணர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று உலகமும் முழுவதும் பரவியுள்ள நிலையில், கொரோனாவின் இரண்டாவது அலை குறையத் தொடங்கி வருகிறது. இதற்கிடையே இந்தியாவில், மியூகோர்மைகோசிஸ் என்ற புதிய நோய் கருப்பு பூஞ்சை நோய் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மற்றொரு கொரோனா வைரஸ் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ், நாய்களால் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளாக வைரஸ் குறித்து ஆய்வு நடத்தி வரும் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் கிரிகோரி கிரே கூறுகையில், ‘மலேசியாவில் நாய்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதை கண்டறிந்து உள்ளோம். எனது மாணவர்களும், நானும் ஒன்றிணைந்து ஒரு சோதனைக் கருவியை உருவாக்கினோம். கொரோனா வைரஸ் மற்றும் பிற வைரஸ்களை இந்த கிட் மூலம் கண்டறிய முடியும். இந்த கருவியின் உதவியுடன் கடந்தாண்டு சில மாதிரிகளை சோதித்தபோது, ​​நாய்களுக்கும் அது பொருந்தி வருகிறது. மலேசியாவின் சர்வேக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் நாயிடம் இருந்து தொற்று பரவியதை கண்டறிந்தோம்.

எங்களது குழு பரிசோதித்த 301 மாதிரிகளில், எட்டு நாய்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது, ​​இந்த மாதிரிகள் அமெரிக்காவின் ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற வைராலஜிஸ்ட் அனஸ்தேசியா விளாசோவாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து அவர் எங்களிடம் கூறுகையில், ‘நாய்கள் மூலம் தொற்று ஏற்படும் அபாயம் இல்லை. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் குணப்படுத்தப்பட்டு வருகின்றனர். எனவே, நாய்களிடமிருந்து கொரோனா வைரஸ் வரும் அபாயம் இல்லை’ என்று அவர் கூறினார்’ என்று  கிரிகோரி கிரே கூறினார்.

Related Stories: