நிதானம் தேவை பன்ட்: கபில்தேவ் அட்வைஸ்

மும்பை: இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 18 முதல் 22ஆம் தேதிவரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ், கூறுகையில், “ரிஷப் பன்ட் அணிக்குள் வந்ததிலிருந்து முதிர்ச்சியுடன் விளையாடுகிறார். முன்னணி பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு கடினமான ஷாட்களைகூட மிக சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து அதிரடியாக விளையாட வேண்டும் என்பதுதான் அவரின் எண்ணம்.

ஆனால், இங்கிலாந்தில் அப்படி விளையாட முடியாது. இங்கிருக்கும் காலநிலை வேறு. தொடர்ந்து அதிரடி காட்ட நினைத்தால் விரைவில் பெவிலியன் திரும்பும் நிலை ஏற்படும். இதனால், அவர் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். ரோஹித் ஷர்மாவும் இப்படிதான் அதிரடியாக விளையாட நினைத்து ஆட்டமிழந்துவிடுவார். டெஸ்டை பொறுத்தவரை நிதானம்தான் முக்கியம். ரிஷப் பன்ட் அதனை கடைப்பிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Related Stories: