×

ரஷ்யாவில் வீட்டு வளர்ப்பு விலங்குகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!: பூனை, நாய்களோடு மருத்துவமனைக்கு மக்கள் படையெடுப்பு..!!

மாஸ்கோ: வீட்டு விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் விதமாக ரஷ்யாவில் செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியிருக்கிறது. 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கோடிக்கணக்கானோரை தாக்கியுள்ள கொரோனா சில நாடுகளில் விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் அமெரிக்க  விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த புலிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சமீபத்தில் இந்தியாவில் உத்திரப்பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களில் விலங்கியல் பூங்காக்களில் உள்ள 10 சிங்கங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டன. 


கொரோனா வைரஸ் விலங்குகள் மூலமாகவும் பரவும் என்பது உறுதியானதை அடுத்து ரஷ்யாவில்  வீட்டு வளர்ப்பு விலங்குகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளை ரஷ்யா தொடங்கியிருக்கிறது. இதுகுறித்து ரஷ்ய கால்நடைத்துறை அதிகாரி தெரிவித்ததாவது, கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் விதமாக செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறோம். இதற்கான பிரத்யேக தடுப்பூசி மருந்து கோர்னிவாக் - கோவ், அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது. 


இந்த பிரத்யேக தடுப்பூசியை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து எங்களுக்கு தந்திருக்கின்றனர் என குறிப்பிட்டார். வீட்டு விலங்குகளை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக பிரத்யேக தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ள ரஷ்ய விஞ்ஞானிகள், அதற்கு கோர்னிவாக் - கோவ் என்று பெயரிட்டுள்ளனர். முதற்கட்டமாக நாய்கள் மற்றும் பூனைகளுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ள ரஷ்யா, அடுத்தகட்டமாக விலங்கியல் பூங்காவில் உள்ள புலிகள், சிங்கங்களுக்கு தடுப்பூசி அளிக்க முடிவு செய்துள்ளது. 



Tags : Russia , Russia, Pet, Vaccine, Cat, Dog, Hospital
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...