×

சொந்த நாட்டுக்கு தடுப்பூசியை வழங்காமல் வெளிநாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்தது ஏன்? என்று கேள்வி கேளுங்கள்!: பொதுமக்களுக்கு பிரியங்கா காந்தி வலியுறுத்தல்..!!

டெல்லி: சொந்த நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை வழங்காமல் வெளிநாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்தது ஏன் என்று ஒன்றிய அரசை மக்கள் கேள்வி கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொரபாக ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பிரியங்கா காந்தி, உலகிலேயே அதிக தடுப்பூசிகளை தயாரிக்கும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் ஏற்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தடுப்பூசி செலுத்துவதற்கான டெண்டர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே தயாராகிவிட்டதாக கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஏன் அவற்றை கொள்முதல் செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 


ஆனால் மற்ற நாடுகள் கடந்த ஆண்டு கோடையிலேயே தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த தொடங்கிவிட்டதாக பிரியங்கா காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் உலக நாடுகளுக்கு 6 கோடி டோஸ் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்த ஒன்றிய அரசு, 130 கோடி மக்களை கொண்ட சொந்த நாட்டில் வெறும் மூன்றரை  கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தியது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 


கொரோனா தடுப்பூசிக்கான சான்றிதழ்கள், மோடியின் படத்தை தாங்கி வந்த போது மாநிலங்களுக்கு மத்திய அரசு காட்ட வேண்டிய பொறுப்பு வெகுதூரம் சென்றுவிட்டதாகவும் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். எனவே இந்திய மக்களுக்கு பதில் சொல்ல ஒன்றிய அரசு கடமைப்பட்டுள்ளது என்றும் எனவே மக்கள் அனைவரும் ஒன்றிய அரசை கேள்வி கேட்க வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். 



Tags : Priyanka Gandhi , Homeland, Vaccine, Union Government, Overseas, Priyanka Gandhi
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!