×

கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் ஆயுர்வேத லேகியத்திற்கு ஆந்திர அரசு மீண்டும் அனுமதி தர வேண்டும்!: முன்னாள் அமைச்சர் சந்திரமோகன் வேண்டுகோள்..!!

ஹைதராபாத்: கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் ஆயுர்வேத லேகியத்திற்கு ஆந்திர அரசு உடனடியாக மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் சந்திரமோகன் ஆந்திர அரசை வலியுறுத்தியுள்ளார். ஆந்திர மாநிலம் நெல்லூர் கிராமத்தில் உள்ள கிருஷ்ணபட்டணத்தை சேர்ந்த ஆனந்தய்யா என்ற ஆயுர்வேத மருத்துவர், கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்தை தயாரித்து அதை தொற்று பாதித்தவர்களுக்கு வழங்கி குணப்படுத்தி வந்தார். இதனையடுத்து அவரிடம் மருந்தை பெறுவதற்காக ஏராளமானோர் திரண்டனர். இதனால் அப்பகுதியில் கொரோனா பரவும் அபாயமும் ஏற்பட்டது. 


இதனையடுத்து அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி உத்தரவுப்படி மருந்து விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆனந்தய்யாவின் கொரோனா ஆயுர்வேத லேக்யம் குணமாவதை அறிந்து தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளியில் இருந்து 700 கிலோ மீட்டர் பயணம் செய்து மல்லாரெட்டி என்ற இளைஞர் தனது தாயாருடன் லேகியம் பெற வந்துள்ளார். ஆனால் ஆனந்தய்யா மருந்து வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். இதனால் தவித்துப்போன மல்லாரெட்டி ஒருகட்டத்தில் மயங்கி கீழே விழுந்துவிட்டார். இதனை அறிந்து ஆனந்தய்யாவிடம் பணிபுரியும் ஊழியர்கள் சிலர், மல்லாரெட்டிக்கு ஆயுர்வேத லேகியத்தை பெற்று கொடுத்தனர். 


இதனையடுத்து மல்லாரெட்டி சுவாசப்பிரச்சனை நீங்கி குணமடைந்துள்ளார். இதனை அறிந்த தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் சந்திரமோகன், கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் ஆயுர்வேத லேக்கியத்திற்கு அரசு உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடையே பேசிய அவர், லேகியம் நாட்டு மருந்து என்பதால் எந்தவித பக்க விளைவுகளும் இல்லை. இந்த லேகிய மருந்தை ஆந்திர அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயுஷ் அங்கீகரித்துள்ளதால் இதை விட வேறு எந்த ஆதாரமும் தேவையில்லை. 


முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி உடனடியாக இந்த மருந்தினை ஏழை, எளியவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார். ஆனந்தய்யாவின் ஆயுர்வேத லேகியம் எந்தவித பக்க விளைவுகளும் இல்லை என்பதை ஆயுஷ் ஏற்கனவே தெரிவித்துள்ளதை அமைச்சர் சந்திரமோகன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆயுர்வேத லேகியத்தை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சமூக வலைத்தளங்களில் 7ம் அறிவு திரைப்படத்தில் போதி தர்மர் போல் வரும் நடிகர் சூர்யாவை போன்று ஆனந்தய்யாவையும் போதி தர்மராக சித்தரித்து தயாரித்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.



Tags : AP Government ,Ayurvedic Legium ,Chandramohan , Corona Patient, Ayurvedic Legion, Andhra Pradesh, Former Minister Chandramoka
× RELATED தேர்தல் விழிப்புணர்வு கருத்தரங்கம்