×

ராணுவத்தால் கைது செய்யப்பட்ட மாலி நாட்டு அதிபர், பிரதமர் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்..!!

மாலி: ராணுவத்தால் கைது செய்யப்பட்ட மாலி அதிபர், பிரதமர் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராணுவம் ஆட்சியை கவிழ்த்தது. இதன் காரணமாக அதிபராக இருந்த இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா பதவியில் இருந்து நீக்கப்பட்டார். சர்வதேச அழுத்தம் காரணமாக கடந்த செப்டம்பரில் இடைக்கால அதிபராக பாண்டவ்வோவும், பிரதமராக மோக்டார்  அவுனேவும் பொறுப்பேற்றனர். இருப்பினும் முக்கிய பதவிகளை ராணுவம் கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் மாலி அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு ராணுவ அமைப்பில் இருந்த இரண்டு உறுப்பினர்கள் மாற்றப்பட்டனர். 


இதனால் ஆத்திரமடைந்த ராணுவம், இடைக்கால அதிபர் பாண்டவ் மற்றும் பிரதமர் மோக்டார்ரை கைது செய்தது. மாலியில் ஏற்கெனவே தீவிரவாத கும்பல்கள், ராணுவ சண்டை, அரசியல் நெருக்கடி, வறுமை என பல பிரச்சினைகள் நீடிக்கின்றன. இதற்கிடையே ஆட்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. எந்த ஆலோசனையும் நடத்தாமல் அதிபரும், பிரதமரும் தன்னிச்சையாக செயல்பட்டதாக ராணுவம் குற்றம்சாட்டியது. இதையடுத்து மாலி அதிபர் மற்றும் பிரதமர் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 



Tags : President ,Mali , Army, Arrest, President of Mali, Prime Minister, resignation
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...