×

முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம்

சென்னை: முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவம், வருவாய்துறை, பொதுத்துறை மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்துக்கு தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்திருந்தார். 


தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக அதிகரித்த தொற்று பரவலால், கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் ஊரடங்கை மக்கள் சரியாக பின்பற்றாத காரணத்தால் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து, ஊரடங்கை 31ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்காக முதலமைச்சர் அறிவித்தார். 



Tags : BC ,Stalin , Full curfew, extended, Chief Minister, consultation
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...