×

தடுப்பூசி வீணாகும் விஷயத்தில் மத்திய அரசு தவறான தகவல் அளிக்கிறது: ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் குற்றச்சாட்டு

ராய்பூர்: நாட்டிலேயே அதிகமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் 37.3 சதவீதமும், சட்டீஸ்கர் மாநிலத்தில் 30.2 சதவீதமும் கொரோனா தடுப்பூசி வீணாக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதனை 2 மாநில அரசுகளும் மறுத்துள்ளன. சட்டீஸ்கர் மாநிலம் இதுவரை 68 லட்சத்து 40 ஆயிரத்து 210 டோஸ் தடுப்பூசி பெறப்பட்டுள்ளது. இதில், 61 லட்சத்து 67 ஆயிரத்து 632 டோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. 55,608 டோஸ் வீணாக்கப்பட்டுள்ளது. இதன்படி 0.81% மட்டுமே வீணாக்கப்பட்டுள்ளதாக சட்டீஸ்கர் அரசு தெரிவித்துள்ளது.  ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் டிவிட்டர் பதிவில், ‘‘மொத்த தடுப்பூசியில் 4.65% மட்டுமே வீணாகி உள்ளது. இதில் மத்திய அரசு தவறான தகவல்களை தருகிறது’’ என்றார்.


Tags : Jorkhand , Central government misrepresents vaccine waste: Jharkhand, Chhattisgarh charge
× RELATED ஜார்க்கண்ட் மாநிலம் ஜமந்தாரவைச்...