×

சடலங்களை காட்டி மிரட்டும் மியான்மர் ராணுவம்

நேப்பியாதவ்: மியான்மரில் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி ராணுவ புரட்சி ஏற்பட்டது. ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து அங்கு கடந்த 4 மாதங்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு பல்வேறு  அடக்குமுறைகளை ராணுவம் கையாண்டு வருகின்றது.  அதன் ஒருகட்டமாக தற்போது போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை ராணுவம் சுட்டுத் தள்ளி நிஜ காட்சிகளின் சிசிடிவி பதிவுகளை ராணுவமே வெளியிடுகிறது. அந்த புகைப்படங்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்குகிறது.

பாதுகாப்பு படையினர் சடலங்களையும், காயமடைந்தவர்களின் உடல்களையும் பொதுமக்களிடையே நிச்சயமற்ற தன்மை மற்றும் போராட்டத்தை நிறுத்துவது, வன்முறையை ஒடுக்குவதற்கான கருவியாக பயன்படுத்தி வருகின்றனர். ராணுவ ஆட்சிக்கு பின் 825 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிலர் காணாமல் சென்றுள்ளனர். சிலர்  கைது செய்யப்பட்டு மறுநாள் இறந்துவிட்டனர். அவர்களின் சடலங்களில் சித்ரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளது. குடும்பத்தினர் அனுமதியின்றி பிரேத பரிசோதனை செய்யப்படுகின்றது. சடலங்கள் நள்ளிரவில் தகனம் செய்யப்படுகின்றன.


Tags : Myanmar , Myanmar army threatening bodies
× RELATED அதிக தேர்தல் பத்திரங்கள் வாங்கிய...