×

முதல் நபராக ரங்கசாமி பதவிப்பிரமாணம் புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு: நியமன உறுப்பினர்கள் 3 பேரும் பதவியேற்றனர்

புதுச்சேரி: புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களும், நியமன உறுப்பினர்கள் 3 பேரும் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 2ம் தேதி வெளியானது. என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி மெஜாரிட்டி இடங்களை கைப்பற்றியது. கடந்த 7ம் தேதி ரங்கசாமி மட்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னயில் உள்ள மருத்துவமனையில் 9ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 17ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். இதன்காரணமாக 23 நாட்களை கடந்த பின்னரும் எம்எல்ஏக்கள் பதவியேற்கவில்லை. இந்நிலையில், தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் நேற்று காலை 9.35 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்றார். அவருக்கு கவர்னர் தமிழிசை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், சபாநாயகர் அறையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா நடந்தது. முதல்நபராக ரங்கசாமி எம்எல்ஏவாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். தொடர்ந்து 28 எம்எல்ஏக்களும் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களை தொடர்ந்து நியமன எம்எல்ஏக்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் பதவியேற்றனர்.

Tags : Rangasamy ,Puducherry Inauguration , Rangasamy sworn in as first person Puducherry MLAs sworn in: 3 nominated members sworn in
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி