×

கோவை மாவட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ மரணம்

கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கே.பி.ராஜு (70). கோவை மாநகர் மாவட்ட அதிமுக அவைத்தலைவர். 1991-1996ல் அப்போதைய பேரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். தற்போது, கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய (ஆவின்) தலைவராக பதவி வகித்து வந்தார். இவருக்கு ரேணுகா, சாந்தி என்ற இரு மனைவிகள். 3 மகன், ஒரு மகள். சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த கே.பி.ராஜு, கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.

Tags : Kovai District ,MLA , Former AIADMK MLA dies in Coimbatore
× RELATED அதிமுக மாஜி எம்எல்ஏ காரில் சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்