×

8.45 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு எம்ஜிஎம் நிறுவனத்தை வாங்கியது அமேசான்

சென்னை: பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான மெட்ரோ கோல்ட்வின் மேயர் என்கிற எம்ஜிஎம் நிறுவனத்தை 8.45 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது. இது இந்திய மதிப்பில் 62 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான எம்ஜிஎம், இதுவரை 4 ஆயிரம் திரைப்படங்களையும், 17 ஆயிரம் டி.வி நிகழ்ச்சிகளையும் தயாரித்துள்ளது. இது அமேசானின் ஸ்டுடியோஸ், திரைப்படம், ஸ்ட்ரீமிங் மற்றும் டி.வி பிரிவுகளுக்கு உதவும் என்று கூறப்படுகிறது.

எம்ஜிஎம்மின் படைப்புகளை அவர்களுடன் இணைந்து மேம்படுத்தவும், புத்துயிர் கொடுக்கவும் தயாராக இருப்பதாக பிரைம் வீடியோ மற்றும் அமேசான் ஸ்டுடியோஸ் துணை தலைவர் மைக் ஹாப்கின்ஸ் கூறியுள்ளார். ‘ஜேம்ஸ்பாண்ட்’ திரை வரிசை, ‘ராக்கி’, ‘பேஸிக் இன்ஸ்டின்க்ட்’, ‘ரோபோ காப்’ உள்பட பல திரைப்படங்கள் எம்ஜிஎம் தயாரித்தவை.


Tags : Amazon ,MGM , Amazon bought MGM for $ 8.45 billion
× RELATED திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகள்...