×

மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக அரசு விலக்கிக் கொள்வதுதான் இந்தப் பிரச்னையின் தீர்வுக்கு முதல் படி: ப.சிதம்பரம் ட்வீட்

டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் இன்றுடன் ஆறு மாதங்களை நிறைவடைந்துள்ளது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். வேளாண் சட்டத்தை விலக்கிக் கொள்வதுதான் போராட்டத்திற்கான தீர்வின் முதல்படி எனவும் பதிவிட்டுள்ளார். விவசாயிகள் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் மத்திய அரசு, தான் நிறைவேற்றிய சட்டங்களை விலக்கிக் கொள்கிறோம் என்று ஏன் சொல்ல மறுக்கிறது என கூறினார். மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக அரசு விலக்கிக் கொள்வதுதான் இந்தப் பிரச்னையின் தீர்வுக்கு முதல் படி என குறிப்பிட்டார். 


வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு இயற்றியது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்பதால் அவற்றை ரத்து செய்ய வேண்டும் என பஞ்சாப், அரியானா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.



Tags : P. Chidambaram , Three agricultural law, exclusion, Chidambaram, tweet
× RELATED பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை: ப.சிதம்பரம் பேட்டி