×

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு: கைத்தறி மற்றும் துணி நூல் துறை ஆணையராக பீலா ராஜேஷ் நியமனம்

சென்னை: வணிகவரித்துறை செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா ராஜேஷ், கைத்தறி மற்றும் துணி நூல் துறை ஆணையராக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு, முன்னர் அவர் சுகாதாரத்துறை செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் முக்கிய அரசு அதிகாரிகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர்.

முதல்வருக்கான தனிச் செயலாளர்கள், தலைமைச் செயலாளர் ஆகிய அதிகாரிகள் முதலில் நியமிக்கப்பட்ட நிலையில் காவல் துறையிலும் பல்வேறு அதிகாரிகள் மாற்றப்பட்டனர். ஐபிஎஸ் அதிகாரிகளும் பலர் மாற்றப்பட்டனர். தற்போது துறை ரீதியாகவும் செயலாளர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். நேற்று 21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

* நேற்று காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த பீலா ராஜேஷ், கைத்தறி மற்றும் துணி நூல் துறை செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* தொழில்துறை முதலீட்டு நிறுவனத்தின் இயக்குனராக இருந்த சிகி தாமஸ் வைத்யன், கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*சுற்றுலாத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த விக்ரம் கபூர், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

* சிறு, குறு, நடுத்தர தொழில் வளர்ச்சித்துறையில் முதன்மை செயலராக இருந்த மங்கத் ராம் சர்மா, நீர்ப்பாசன விவசாய நவீனமயமாக்கல் மற்றும் நீர்நிலை மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மையின் முதன்மை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

* சிறுதொழில் நிறுவனங்களுக்கான இயக்குனர் மற்றும் செயலராக இருந்த விபுநாயர், நிலப் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தின் கூடுதல் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* ஊரக வளர்ச்சித் துறை, பஞ்சாயத்து துறை இயக்குனராக ஜெயஸ்ரீ ரகுநந்தன் மாற்றப்பட்டுள்ளார். மேலும் சில துறை அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

Tags : TN Government ,Tamil Nadu ,Beila Rajesh ,Department of Lincoln ,Clothes , Government of Tamil Nadu orders transfer of 6 IAS officers in Tamil Nadu: Beela Rajesh appointed Commissioner of Handloom and Textiles
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...