×

வெப்பச் சலனம் காரணமாக தேனி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை: வெப்பச் சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வெப்பச் சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி ,தென்காசி, மதுரை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். திருப்பூர் ,நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.  

நாளை தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். வருகின்ற 28ஆம் தேதி மற்றும் 29 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

30-05-2021 அன்று தேனி திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தரைக் காற்று ஒரு சில நேரங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் . அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். இன்று முதல் 30ஆம் தேதி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்படும் இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று மதியம் 12:20 மணிக்கு அதிதீவிர புயலான யாஸ், பாலசுருக்கு அருகே கரையை கடந்தது” என்று அதில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Thani ,Kanyakumari ,Thapasi ,Center , 6 districts including Theni, Kanyakumari and Tenkasi are likely to receive heavy rains due to heat wave: Meteorological Department.
× RELATED தேனி உழவர் சந்தை பகுதியில் திமுக...