வீரகனூரில் மயானத்துக்கு செல்ல பாதை அமைப்பு

கெங்கவல்லி : வீரகனூர் பேரூராட்சியில் மயானத்துக்கு செல்ல, சுவேத நதியில் மண்கொட்டி பாதை அமைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த வீரகனூர் பேரூராட்சி 1 மற்றும் 2வது வார்டுகளில் கொரோனா தொற்று, இயற்கை மரணத்தால் உயிரிழந்தவர்களை தகனம் செய்வதற்காக ஸ்வேத நதியை கடந்து செல்லும் நிலை காணப்படுகிறது. மயானத்திற்கு போதிய பாதை வசதியின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவது குறித்து தினகரன் நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த வீரகனூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடாஜலம், பொக்லைன் வாகனம் மூலம் சுவேத நதியில் குறுக்கே நடந்து செல்ல ஏதுவாக, தற்காலிகமாக மண்பாதை அமைத்து கொடுத்தார். மேலும் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து சிமெண்ட் குழாய் வைத்து தரைப்பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Related Stories:

>