வெலிங்டன் ராணுவ மையம் சார்பில் ஏழைகளுக்கு உணவு

குன்னூர் :  நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் பகுதியில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ மையத்தில் இளம் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி பெறும் வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்டு வருகின்றனர்.

 கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு காரணமாக மக்களுக்கு உணவு மற்றும் உணவுபொருட்கள் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதால் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ மையம் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மற்ற உணவு  வழங்கப்பட்டு வருகிறது.

தக்ஷின் பாரத் ஏரியாவின் வழிமுறைகளின்படி மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரின் சார்பில் ராணுவ வீரர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் மற்றும் தினக் கூலி தொழிலாளர்களுக்கு உணவு அளித்தனர். குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் வாரியத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

Related Stories: