தடுப்பூசி வாங்க முடியாமல் தவிக்கும் ஏழை நாடுகளுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் நன்கொடை!: ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் மாநாட்டில் முடிவு..!!

பிரஸ்சல்ஸ்!: தடுப்பூசி வாங்க முடியாமல் தவிக்கும் ஏழை நாடுகளுக்கு சுமார் 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்படும் என்று 27 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் ஐரோப்பிய கூட்டமைப்பு உறுதி அளித்துள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களின் 2 நாள் மாநாடு பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 27 நாடுகளின் தலைவர்கள், கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவது, வானிலை மாற்றம், பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட தலைப்புகளில் விவாதித்தார்கள். உலக அளவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்புகளை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. 

அப்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையிலும்  பொருளாதார வீழ்ச்சியால் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய முடியாமல் தவிக்கும் ஏழை நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்ட ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் முடிவு செய்துள்ளார்கள். இதற்காகவே ஐ.நா. அமைத்துள்ள கோவாக்ஸ் அமைப்புடன் ஒருங்கிணைந்து தடுப்பூசிகளை கட்டணமின்றி  விநியோகிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக இந்த ஆண்டின் இறுதிக்குள் படிப்படியாக சுமார் 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை சொந்த நாட்டில் தயாரிக்க விரும்பும் ஏழை நாடுகளுக்கு ரீதியில் உதவி செய்யவும் ஐரோப்பிய யூனியன் அமைப்பு திட்டமிட்டுள்ளது. 

Related Stories: