×

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு கைப்பட்டை: மாநகராட்சி ஆணையர் வழங்கினார்

சென்னை: சென்னை யில்  கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு மாநகராட்சி சார்பில் கைப் பட்டை வழங்கப் பட்டது. சென்னை மாநகராட் சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதும் வகையில்,  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து களப்பணி,  கட்டுப்பாட்டு அறைகளில் பணி மேற்கொள்ளுதல் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு  உணவு வழங்குதல் போன்ற பணிகளில் தங்கள்  நிறுவனத்தின் சார்பாக  தன்னார்வலர்களை ஈடுபடுத்தி வருகின்றன. அதன்படி, சென்னை மாநகராட்சியில் 85 தன்னார்வ  தொண்டு நிறுவனங்கள் மூலம் 1,073 தன்னார்வலர்கள் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்  மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் வணிக வரித்துறை முதன்மை செயலாளர் சித்திக் தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகையில் நடந்தது.

இதை தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக  சென்னை மாநகராட்சி சார்பில், கோவிட் தடுப்பாளர் என்ற கைப்பட்டை வழங்கப்பட்டது. கூட்டத்தில், துணை ஆணையர் (பணிகள்) மேகநாத ரெட்டி, துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) விஷூ மகாஜன், வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டிபாபு, தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Commissioner ,Corporation , Handcuffs for volunteers involved in corona prevention work: Presented by the Commissioner of the Corporation
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...