×

வருமான வரித்துறையை சரி செய்யவே பள்ளியில் சீட் கொடுத்தாங்க: நடிகை குட்டி பத்மினி பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: நடிகை குட்டி பத்மினி சமூக வலைதளங்களில் பேசியதாவது:
பத்ம சேஷாத்திரி பள்ளியில் சீட் வாங்குவதற்காக கியூவில் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒய்ஜிபி அழைத்ததால் அவங்க அறைக்கு போனேன், ஏம்மா... நீ எல்லாம் கியூவில் நிற்கலாமா.. இந்த ஸ்கூலுக்கு முதன்முதலில் பெரியவங்க எல்லாம் அடிக்கல் நாட்டும் போது, நீ அந்த டைம்ல வந்திருக்கிற...உன் கையால அடிக்கல் நாட்டியிருக்கிற.. எனக்கு ரொம்ப நல்லா தெரியும். பல சீரியல்ல ஆக்ட் பண்ணியிருக்கேன். டிராமா, திரைப்படத்தில் ஆக்ட் பண்ணியிருக்கேன்.
ஆனாலும் நான் யாருகிட்டயும் போயி ஆப்ளிகேஷன் கேட்கிறது எனக்கு பிடிக்கவே பிடிக்காது. சீட் கிடைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆனால் நடந்தது என்ன?. என்னுடைய மகளுக்கு அட்மிஷன் எல்லாம் ஆயிருச்சி. ஸ்கூல்ல படிச்சிகிட்டு இருந்தாள். ஒரு மாதத்துக்கு அப்புறம் மேடம் கூப்பிடுதாங்கன்னு சொன்னாங்க. எனது மகள் சரியான வாண்டு.. என்ன பண்ணிச்சோ.. யார அடிச்சாளோ என நினைத்துக்கொண்டே ஸ்கூலுக்கு போனேன்.

உடனே என்னிடம் சொன்னாங்க, நீ வருமானவரித்துறைக்கு சீரியல் பண்ணிக்கிட்டு இருக்கியே, ரொம்ப நல்லா இருக்கு. தொடர்ந்து நான் பார்த்துக்கிட்டு இருக்கேன்னு சொன்னாங்க. வருமான வரித்துறை சேர்மனை நீங்க மீட் பண்ணியிருக்கிறீர்களா என்று கேட்டார். ஓ, நல்லா தெரியுமே அவரை பார்த்து தான் அப்ரூவலே வாங்கி இருக்கோம். ஒவ்வொரு வாரமும் ஸ்டோரி எல்லாம் அவர் தான் கிளியர் பண்ணணும்னு சொன்னேன். அவர்கிட்ட ஒரு சின்ன வேலை இருக்கு. எங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுக்க மாட்டேன் என்கிறார். அப்படியா என்ன விஷயம் என கேட்டேன். கொடைக்கானலில் ஒரு சொத்து வாங்கியிருக்கிறோம்.

ஸ்கூல் அக்கவுண்ட்ல வாங்கியிருக்க வேண்டுமாம். ஆனால் வேறு ஒரு அக்கவுண்ட்ல வாங்கிட்டாங்களாம். சட்டப்படி அது தப்பு போல இருக்கும். அதனால வருமான வரித்துறை பெரிய அளவில் வரி போட்டுட்டாங்க போல இருக்கு. அதனால அவரை பார்த்து பேசி எப்படியாவது அதை கரெக்ட் பண்ணி கொடுக்கணும்னு கேட்டாங்க. அப்ப தான் எனக்கு புரிந்தது. இவங்க இதுக்காக தான் எனக்கு சீட் கொடுத்திருக்காங்க. உண்மையிலே என் மேல இருந்த அன்புனால கொடுக்கவில்லை என்பதை புரிந்து கொண்டேன். இவ்வாறு அவர் பேசியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது

Tags : Kutty Padmini , Actress Kutty Padmini charged with sedition
× RELATED நடிகை குட்டி பத்மினி பாஜவுக்கு திடீர் முழுக்கு