×

ராணுவம் அதிரடி: மாலியில் அதிபர், பிரதமர் கைது: பதவியிலிருந்து நீக்கம்

பாமகோ:  மாலி நாட்டின் இடைக்கால அதிபர் மற்றும் பிரதமரை ராணுவம் நேற்று அதிரடியாக  கைது செய்து இருவரையும் பதவியிலிருந்து நீக்கி ஆட்சியை கைப்பற்றியது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராணுவம், ஆட்சியை கவிழ்ந்தது. இதன் காரணமாக அதிபராக இருந்த இப்ராகிம்  பவுபாக்கர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.  சர்வதேச அழுத்தத்தின் காரணமாக ராணுவ ஆட்சிக்குழுவானது  தற்காலிகமாக ஆட்சியை ஒப்படைக்க ஒப்புகொண்டன. இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பரில் இடைக்கால  அதிபராக பா டாவ்   மற்றும் பிரதமராக மொக்தார் உவானே ஆகியோர் பொறுப்பேற்றனர். எனினும் முக்கிய பதவிகளை  ராணுவமே  கைப்பற்றியிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. இதில் ராணுவ அமைப்பில் இருந்த இரண்டு உறுப்பினர்கள் மாற்றப்பட்டனர்.

இந்த மாற்றம் நடந்த ஒரு சில மணி நேரங்களில்   ராணுவம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதிபர் பா டாவ் மற்றும் பிரதமர் மொக்தார் ஆகியோரை ராணுவம் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மாலியின் முன்னாள் ராணுவ தலைவர் அஸ்சிமி கொய்டா விடுத்த அறிக்கையில், ‘‘எந்த ஆலோசனையும் நடத்தாமல் அதிபரும், பிரதமரும் தன்னிச்சையாக செயல்பட்டதால் அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு நிச்சயம் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு தேர்வு செய்யப்படும்’ என கூறி உள்ளார்.



Tags : President ,PM ,Mali , Military action: President, PM arrested in Mali: Dismissed
× RELATED சொல்லிட்டாங்க…