சாத்தான்குளம் வழக்கில் சிபிஐக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் (ஜெயராஜ், பென்னிக்ஸ்) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காவலர் ரகுகணேஷ் தரப்பில் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் வினீத் சரண் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, இந்த மனுவை முன்னதாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தொடர்ந்துள்ள மேல்முறையீடு வழக்கோடு இணைத்து ஒன்றாக விசாரிக்கப்படும் என உத்தரவிட்டனர்.

Related Stories:

More
>