×

ஸ்ட்ரஸ்பர்க் ஓபன் பியான்கா முன்னேற்றம்

ஸ்ட்ரஸ்பர்க்: பிரான்சில் நடைபெறும் ஸ்ட்ரஸ்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்ரையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, முதல் நிலை வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீஸ்கு  (கனடா) தகுதி பெற்றார்.  2வது சுற்றில் பெல்ஜியம் வீராங்கனை மரினா ஜானேவ்ஸ்காவுடன் (259வது ரேங்க்) மோதிய பியான்கா 6-1, 6-4 என நேர் செட்களில்  எளிதில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி ஒரு மணி, 5 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. காயம் காரணமாக கடந்த 18 மாதங்களாக எந்த போட்டியிலும் பங்கேற்காமல்  இருந்த  பியான்கா, இந்த வெற்றியால் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளார். முதல் சுற்றில் களமிறங்கிய அமெரிக்க நட்சத்திரம்   வீனஸ் வில்லியம்ஸ் (104வது ரேங்க்)   1-6, 6-2, 1-6  என்ற செட் கணக்கில்  ருமேனியா வீராங்கனை சொரானா சிர்ஸ்டீயிடம் (61வது ரேங்க்) தோற்று வெளியேறினார்.

Tags : Strasbourg ,Bianca , Strasbourg Open Bianca progress
× RELATED யுஎஸ் ஓபன் டென்னிஸ் காலிறுதியில்...