×

ஐரோப்பா லீக் பைனல் மான்செஸ்டர் யுனைட்டட் வில்லாரியலுடன் பலப்பரீட்சை

குடான்ஸ்க்: யுஇஎப்ஏ ஐரோப்பா   லீக்   கால்பந்து தொடரின் பைனலில்  வில்லாரியல் - மான்செஸ்டர் யுனைட்டட் அணிகள் நாளை   மோதுகின்றன. ஐரோப்பியாவில் நடைபெறும் முக்கிய கால்பந்து தொடர்களில் யுஇஎப்ஏ லீக் பிரபலமானது. நடப்பு சீசனில் 48 அணிகள் லீக் சுற்றில் விளையாடின. அரையிறுதியில் மான்செஸ்டர் யுனைட்டட் (இங்கிலாந்து) அணி   ரோமா (இத்தாலி) அணியையும்,  வில்லாரியல் (ஸ்பெயின்) அணி ஆர்செனல் (இங்கிலாந்து) அணியையும் வீழ்த்தின. இதைத் தொடர்ந்து, போலந்தின் குடான்ஸ்க் நகரில் நடைபெறும் இறுதிப்போட்டியில் வில்லாரியல் - மான்செஸ்டர் யுனைட்டட் அணிகள் மோதுகின்றன.  கால்பந்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப்போட்டி  இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு தாண்டி 12.30க்கு தொடங்கி நடைபெறுகிறது. ஐரோப்பா லீக் தொடர்களில் மான்செஸ்டர் யுனைடட் அணி 2017ம் ஆண்டு முதல்முறையாக  இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கூடவே அதில் அஜாக்ஸ் (நெதர்லாந்து) அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி  கோப்பையை வென்றது.  ஐரோப்பா லீக்கில் இதுவரை 5 முறை விளையாடிய மான்செஸ்டர் யுனைட்டட் அதில் ஒருமுறை மட்டுமே கோப்பையை வென்றது. ஆனால் வில்லாரியல் முதல்முறையாக இந்த ஆண்டுதான் ஐரோப்பா லீக்கில் விளையாடுகிறது. தனது முதல் தொடரிலேயே இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது. இந்த ஆண்டு இங்கிலீஷ் பிரிமீயர் லீக், ஐரோப்பிய சாம்பியன் லீக் கோப்பைகளை நழுவவிட்ட மான்செஸ்டர் யுனைட்டட்  இந்த கோப்பையை வெல்ல கூடுதல் முனைப்பு காட்டும். அதே நேரத்தில் முதல் தொடரிலேயே கோப்பையை வெல்ல வேண்டும் என்று வில்லாரியலும் வேகம் காட்டும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

Tags : Europa League ,Manchester United ,Villarreal , Europa League final against Manchester United Villarreal
× RELATED பிரீமியர் லீக் கால்பந்து : பிரைட்டனை வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட்