கேரள சட்டசபை சபாநாயகராக ராஜேஷ் தேர்வு

திருவனந்தபுரம்: கேரளாவில் 2வது முறையாக பினராய் விஜயன் தலைமையிலான அரசு கடந்த 20ம்  தேதி பதவி ஏற்றது. நடப்பு 15வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர்  ேநற்று முன்தினம் காலை தொடங்கியது. 140 எம்எல்ஏக்களில், 136 பேருக்கு  தற்காலிக சபாநாயகர் ரஹீம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  இந்த நிலையில் நேற்று இடதுசாரி கூட்டணி சார்பில் திருத்தாலா தொகுதியில் வெற்றிபெற்ற ராஜேஷ் (50)  சபாநாயகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள்  சார்பில் காங்கிரஸ் எம்எல்ஏ விஷ்ணுநாத்  (43) போட்டியிட்டார். இதில் ஆளும்கட்சியை சேர்ந்த ராஜேஷ் வெற்றிபெற்று,  சபாநாயகரானார். அவருக்கு முதல்வர் பினராய்  விஜயன், எதிர்க்கட்சி தலைவர் சதீசன் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories:

More
>