×

ஆசிரியர் பாலியல் தொல்லை தந்த புகார்: தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் விசாரணை

சென்னை: பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியர் பாலியல் தொல்லை தந்த புகாரில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்துகிறது. தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்புகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது. தமிழக தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து 3 நாட்களுக்குள் விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை தர டிஜிபிக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க தொடங்கி இருக்கிறது. சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அதுதொடர்பாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வாயிலாக தெரிய வந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் தானாக முன்வந்து இந்த வழக்கினை விசாரிக்க இருப்பதாகவும் குழந்தைகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது.



Tags : National Child Rights Commission , pocso
× RELATED கூர்நோக்கு இல்லங்களில் மதமாற்றம்,...