×

சென்னை வில்லிவாக்கத்தில் பரபரப்பு: கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்ற மெடிக்கல் கடைக்காரர் அதிரடி கைது

அண்ணா நகர்: கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த மருந்து கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 30 ரெம்டெசிவிர் மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை வில்லிவாக்கம் பஸ் டெப்போ அருகே கொரோனா தடுப்பு மருந்தான ரெம்டெசிவிர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக சென்னை குடிமை பொருள் சிவில் சப்ளை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நேற்று வில்லிவாக்கம் பஸ் டிப்போ அருகே சிவில் சப்ளை சிஐடி ஆய்வாளர் தன்ராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் ஜாபர் உசேன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை மடக்கி விசாரணை செய்து வண்டியை சோதனை செய்தபோது அதில் ரெம்டெசிவிர் மருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதயைடுத்து அவரை கைது செய்து வில்லிவாக்கம் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்ததில், அவர்  வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த செங்குட்டுவன் (35) என்பதும், அவர் அதே பகுதியில் மருந்து கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. மேலும், ரெம்டெசிவிர் மருந்தை 3,000 ரூபாய்க்கு வாங்கி பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் ஒரு பாட்டில் ரூ. 8 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வந்துள்ளார். அவரிடமிருந்து 30 ரெம்டெசிவிர் மருந்து பாட்டில் பறிமுதல் செய்து செய்யப்பட்டது. செங்குட்டுவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Tags : Chennai Villiwam , Chennai Villivakkam riots: Medical shopkeeper arrested for selling Remdecivir on the black market
× RELATED 45 வயது தாயை கழற்றி விட்ட 24 வயது காதலன்...