×

கொரோனா பாதிப்புகளை குறைக்கும் கூட்டு மருந்து இந்தியாவில் அறிமுகம்: ஒரு டோஸ் ரூ.59,750 ஆக நிர்ணயம்

மும்பை: கொரோனா நோயாளிகளின் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அவர்கள் உடல்நிலை மோசமடைவதை தடுக்கும் கூட்டு மருந்து ஒன்றினை பிரபல மருந்து நிறுவனமான ரோட்சி இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட போது அவருக்கு கேசிரிவிமாப், இம்டெவிமாப் எனும் கூட்டுமருந்து தரப்பட்டது.

இந்நிலையில் கேசிரிவிமாப், இம்டெவிமாப் கூட்டுமருந்தை சுவிஸ் நாட்டு நிறுவனமான ரோட்சி இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இரண்டு மருந்துகள் அடங்கிய குப்பிகளாக இந்த மருந்துகள் கிடைக்கிறது. இரண்டு மருந்துகளையும் ஒன்றாக கலந்து கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் கொரோனா தொற்றால் ஏற்படும் உடல் உறுப்பு செயலிழப்பு பெருமளவு தடுக்கப்படும் என்கிறது ரோட்சே நிறுவனம். லேசான மற்றும் மிதமான தொற்று உள்ளவர்களிடமும் 12 வயதிற்கு மேற்பட்ட சிறார்கள் இடையேயும் இந்த மருந்து சிறப்பாக செயல்படுவது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை உயிரிழப்பு ஆகியவற்றை 70 விழுக்காடு அளவிற்கு தடுக்கும் ஆற்றல் கேசிரிவிமாப், இம்டெவிமாப் கூட்டுமருந்திற்கு இருப்பதாக ரோட்சே நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த கூட்டுமருந்தினை விநியோகிக்கும் உரிமையை சுபுலா நிறுவனம் பெற்றுள்ளது. கேசிரிவிமாப், இம்டெவிமாப் கூட்டுமருந்தின் ஒரு டோஸ் விலை 59,750 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



Tags : India , corona
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...