×

கொரோனாவால் உயிரிழந்தால் ஊழியரின் குடும்பத்திற்கு 60 வயது வரை முழு சம்பளம் : டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவிப்பு

மும்பை: தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் யாரேனும் கொரோனா தொற்றால் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்திற்கு 60 வயது வரை முழுச் சம்பளம் வழங்கப்படும் என டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனாவின் 2ஆவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த முன்னணி உருக்கு நிறுவனமான டாடா ஸ்டீல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டாடா ஸ்டீல் நிறுவன ஊழியர்கள் யாரேனும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தால், அவரின் குடும்பத்திற்கு ஊழியர் ஓய்வு பெறும் 60 வயது வரையில் அவரின் சம்பளம் முழுமையாக ஒவ்வொரு மாதமும் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

அத்துடன், ஊழியரின் குடும்பத்திற்கு மருத்துவக் காப்பீடு மற்றும் தங்கும் வசதிகள் செய்து தரப்படுவதாக டாடா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முன்கள ஊழியர் யாரேனும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தால், ஊழியரின் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை பட்டம் பெறும் வரையில் நிர்வாகமே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மிகுற்த வரவேற்பை பெற்றுள்ளது.



Tags : Corona ,Tata Steel , TATA
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...