×

பயணிகள் வரத்து குறைவு; மேலும் 6 சிறப்பு ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பயணிகள் வரத்து குறைவு காரணமாக மேலும் 6 சிறப்பு ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறித்துள்ளது. சென்னை எழும்பூர்-திருச்சி, மதுரை உள்பட 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்து தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவில்-கோவை-நாகர்கோவில் (வண்டி எண்: 06321/06322), சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-கோவை-சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் (02679/02680), சென்னை எழும்பூர்-திருச்சி-சென்னை எழும்பூர் (06795/06796),  கோவை - மங்களூரு-கோவை (06323/06324), சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-கே.எஸ்.ஆர் பெங்களூரு-சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் (06075/06076) ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.


 சென்னை எழும்பூர்-மதுரை-சென்னை எழும்பூர் (02613/02614) சிறப்பு ரெயில்கள் ஜூன் மாதம்15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக ஏற்கனவே சில ரயில்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆகவே பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர். ஆகவே ரயிலில் போதிய பயணிகள் இல்லாததால் 6 ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.



Tags : Southern Railways , Passenger arrivals, reduction, 6 special trains, canceled
× RELATED திருப்பதிக்கு 15 நாள் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு