மோடி பதவி ஏற்று 7 ஆண்டுகள் நிறைவு நாள் கருப்பு நாளாக கடை பிடிக்கும் போராட்டம்: வைகோ ஆதரவு

சென்னை: , மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பாஜ அரசு  கடந்த 2014 மே மாதம் 26ம் தேதி பொறுப்பு ஏற்றது. மோடி இந்தியாவின் 14வது பிரதமராகப் பதவி ஏற்றார். மே 26ம் தேதி 7  ஆண்டுகளை நிறைவு செய்கின்றார். அதற்குள், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆட்சியே கேள்விக்குறி ஆகிவிட்டது. மோடி அரசு  அலட்சியமாக செயல்பட்டத்தின் விளைவாக தற்போது கொரோனா 2வதுஅலையில் சிக்கி நாட்டு மக்கள் உயிருக்குப் போராடுகின்றனர்.  

மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் பகைச் சட்டங்கள் திரும்பப் பெறும்வரை விவசாயிகள் போரட்டம் நடத்தி வருகின்றனர்.  இப்போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திவரும் ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ எனும் அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின்  தலைவர்கள் மோடி பிரதமர் பதவி ஏற்று, 7 ஆண்டுகள் நிறைவு அடையும் நாளான மே 26ம் தேதியை ‘கருப்பு நாளாக’ கடைபிடிக்க  வேண்டும் என்று பிரகடனம் செய்துள்ளனர்.  அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவும், இந்த போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்து இருக்கின்றது.  இப்போராட்டத்திற்கு மதிமுக ஆதரவை வழங்குகின்றது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: