×

ஒரு நிமிடத்தில் கொரோனா பரிசோதனை முடிவு: மருத்துவ மாணவர்கள் கண்டறிந்த புதிய கருவிக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி

கோலாலம்பூர்: மூச்சுக் காற்று மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்றினை கண்டறியும் புதிய கருவிக்கு (பிரீபென்ஸ் கோ) சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்கள், இந்தியப் பேராசிரியர் அடங்கிய குழு கண்டுபிடித்த இந்தக் கருவி மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை ஒரு நிமிடத்துக்குள் கண்டுபிடிக்க முடியும்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ப்ரீத்தா நிக்ஸ் நிறுவனம் சார்பில் இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்டது என செய்தி வெளியாகியுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தை சிங்கப்பூர் சுகாதாரத் துறையுடன் இணைந்து ப்ரீத்தா நிக்ஸ் நிறுவனம் பரிசோதனை செய்து வருகிறது. சிங்கப்பூருக்குள் வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு இந்த ப்ரீபென்ஸ் கோ கொரோனா மூச்சுப் பரிசோதனைக் கருவி மூலம் பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்குள் நுழையும் பிற நாட்டவருக்குக் கண்டிப்பாக ஆன்டி ரேபிட் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதோடு சேர்த்து இந்த ப்ரீபென்ஸ் கோ பரிசோதனையும் நடத்தப்படும். தற்போது நடைமுறையில் இருக்கும் ஆன்டி ரேபிட் டெஸ்ட் கருவியில் கொரோனா பரிசோதனை செய்தால் 30 நிமிடங்களுக்குள் முடிவு கிடைக்கும். ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் சில மணி நேரங்களில் முடிவு கிடைக்கும்.

ஆனால், ப்ரீபென்ஸ் கோ கோவிட் பரிசோதனைக் கருவி மூலம் ஒருவரின் மூச்சுக் காற்றைச் செலுத்தி பரிசோதனை செய்தால், ஒரு நிமிடத்துக்குள் முடிவு கிடைத்துவிடும். இந்த ஸ்பெக்டோமீட்டர் ஒருவரின் மூச்சுக் காற்றைப் பரிசோதித்து அந்தக் காற்றில் தீங்கு விளைவிக்கும் நுண்கிருமிகள் இருக்கிறதா எனக் கண்டறிந்து சில வினாடிகளில் முடிவைக் கூறிவிடும் என்கின்றனர்.



Tags : Corona ,Singapore government , corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...