நடப்பு ஆண்டு நடைபெற இருந்த ஆசிய கோப்பை போட்டி 2023-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைத்து கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு

கொழும்பு: நடப்பு ஆண்டு நடைபெற இருந்த ஆசிய கோப்பை போட்டி 2023-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறுவதாக இருந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட்  போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இலங்கையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. 

அதை தொடர்ந்து அனைத்து அணிகளுக்கும் ஏற்கனவே வகுத்த அட்டவணையின் படி  போட்டிகளில் பங்கேற்க இருப்பதன் காரணமாக ஆசிய கோப்பை போட்டி  2023-ல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், 2022 - ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆசியக் கோப்பைப் போட்டி பாகிஸ்தானில் திட்டமிட்டபடி நடைபெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories:

>